கரும்புகை கக்கியபடி சென்ற அரசு பேருந்தின் தகுதிச் சான்று ரத்து

கோவையில், கரும்புகை கக்கியபடி சென்ற அரசு பேருந்தின் தகுதிச் சான்றை வட்டார போக்குவரத்து அலுவலர் ரத்து செய்தார்.
கரும்புகை கக்கியபடி சென்ற அரசு பேருந்தின் தகுதிச் சான்று ரத்து
x
கோவையில், கரும்புகை கக்கியபடி சென்ற அரசு பேருந்தின் தகுதிச் சான்றை  வட்டார போக்குவரத்து அலுவலர் ரத்து செய்தார். செட்டிபாளையத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த வட்டார போக்குவரத்து அலுவலர் ராஜு, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். கோவை மாநகரில் கரும்புகை கக்கியபடி அரசு பேருந்துகள் இயக்கப்படுவதை பின்னால் சென்ற இரு சக்கர வாகன ஓட்டுநர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டதை தொடர்ந்து, கோவை மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story

மேலும் செய்திகள்