ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்த வழக்கு : வேதாந்தா குழுமம், சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதம்
விதிமீறல்களை நிரூபிக்காமல் தண்டிக்கக் கூடாது என ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா குழுமம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது.
விதிமீறல்களை நிரூபிக்காமல் தண்டிக்கக் கூடாது என ஸ்டெர்லைட் வழக்கில் வேதாந்தா குழுமம், சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை மூடிய உத்தரவை எதிர்த்த வழக்கு, நீதிபதி சிவஞானம், நீதிபதி பவானி சுப்பராயன் அமர்வில் மூன்றாவது நாளாக விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆலை தரப்பில் மூத்த வழக்கறிஞர் அரியமா சுந்தரம் வாதிட்டார். அவர் தமது வாதத்தில், எந்த ஒரு வழிகாட்டு விதிகளையும் மீறியதாக வேதாந்தா மீது எந்த குற்றச்சாட்டும் இல்லை என வாதிட்டார். வாதம் முடிவடையாததால் வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
Next Story