தமிழகத்தில் மிதவை சூரிய மின் உற்பத்தி பூங்கா : வைகை , மேட்டுர் நீர் தேக்க பகுதியில் அமைகிறது
தேனி,சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மிதவை சூரிய மின் உற்பத்தி பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்து.
தேனி,சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் மிதவை சூரிய மின் உற்பத்தி பூங்கா அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்து. இது தொடர்பாக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்க குறிப்பில், வைகை , மேட்டுர் மற்றும் பவானிசாகர் அணைகளின் நீர் தேக்க பகுதிகளில் இந்த மிதவை சூரிய மின் உற்பத்தி பூங்கா நிறுவப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கான மதிப்பீடு ஆயிரத்து 125 கோடி ரூபாய் என்றும், இதன் மூலம் 250 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட உள்ளதாக அந்த கொள்கை விளக்க குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சோலார் எனர்ஜி கார்ப்பரேஷன் ஆப் இந்தியா உடன் சேர்ந்து நிறுவிட உத்தேசிக்கப் பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் அமுலுக்கு வந்தால் கடும் வெப்பதால் நீர் நிலைகளில் நீர் ஆவியாகுவது தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story