ரயில் பெட்டி வடிவில் வகுப்பறைகள் : மாணவர்களை கவர முயற்சி
கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்களை கவரும் வகையில் ரயில் பெட்டி வடிவில் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, பள்ளி வளாகம் பொலிவுடன் காட்சியளிக்கிறது.
கன்னியாகுமரி மாவட்டம் சொத்தவிளை அரசு நடுநிலைப் பள்ளியில், மாணவர்களை கவரும் வகையில் ரயில் பெட்டி வடிவில் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு, பள்ளி வளாகம் பொலிவுடன் காட்சியளிக்கிறது. தமிழகத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக வகுப்பறையின் வெளிப்பகுதி சுவற்றில் ரயில் பெட்டி போல வரையப்பட்டுள்ளது. இது வெளியில் பார்ப்பதற்கு பள்ளி வளாகத்தில் ரயில் பெட்டி நிற்பது போன்று அழகாக காட்சியளிக்கிறது. இது மாணவர்களை மிகவும் கவர்ந்து வரும் நிலையில், இந்தாண்டு பள்ளியின் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story