பணி இடம் மாற்றம் கோரி போலி விண்ணப்பங்கள் : முதல் 2-ஆம் நிலை காவலர்களுக்கு எச்சரிக்கை

சிறைத் துறையில் பணியாற்றும் முதல் மற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் பழி வாங்கும் நோக்கோடு, பணி இடம் மாற்றம் கோரி போலி விண்ணப்பங்கள் அனுப்பியது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
பணி இடம் மாற்றம் கோரி போலி விண்ணப்பங்கள் : முதல் 2-ஆம் நிலை காவலர்களுக்கு எச்சரிக்கை
x
இது தொடர்பாக அனைத்து சிறைத் துறை துணைத் தலைவர்களுக்கு, கூடுதல் இயக்குநர் கனகராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், பணியிட மாற்றம் கோரி நேரடியாக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களில் போலியான விவரங்கள் இடம் பெற்றிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மேலும், ஒரே நபர் பெயரில் வந்த பல விண்ணப்பங்களில், பணியிட மாறுதல் கோரும் இடம் வெவ்வேறாக இருப்பதால், பல குளறுபடிகள், கால விரையம் ஏற்படுதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மூத்த பணியாளர்களின் இத்தகை செயல், பயிற்சி முடித்து பணியில் சேரும் இளம் பணியாளர்களுக்கு தவறான முன் மாதிரியாகிவிடும் என சுற்றறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் சிறைத் துறை குறை தீர்க்கும் நாளில் நேரடியாக பெறப்படும் பணியிட மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் மட்டும் பரிசீலனை எடுத்துக் கொள்ளப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்