அமமுக புதிய நிர்வாகிகள் நியமனம் : துணை பொதுச்செயலாளர்கள் - பழனியப்பன், ரெங்கசாமி
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பொதுச்செயலாளர் தினகரன் விடுத்துள்ள அறிக்கையில், அமமுக துணை பொதுச்செயலாளர்களாக முன்னாள் அமைச்சர் பழனியப்பன் மற்றும் முன்னாள் எம்எல்ஏ ரெங்கசாமி நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாளராக வெற்றிவேலுவும், தலைமை நிலைய செயலாளராக மனோகரனும், கொள்கை பரப்பு செயலாளராக சிஆர்.சரஸ்வதியும் நியமிக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story