அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி நீக்கத்தை எதிர்த்து வழக்கு : செப். 17-க்கு விசாரணை ஒத்திவைப்பு

அ.தி.மு.க.வில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டதற்கு எதிராக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிச்சாமி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவி நீக்கத்தை எதிர்த்து வழக்கு : செப். 17-க்கு விசாரணை ஒத்திவைப்பு
x
அ.தி.மு.க.வின் கட்சி விதிகள் மாற்றப்பட்டு, பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டது. இதனை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.பழனிச்சாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளக் கூடாது என்றும், மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் ஓ.பி.எஸ். மற்றும் ஈ.பி.எஸ். தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.மேலும், கட்சியின் அடிப்படை உறுப்பினராக இல்லாத கே.சி.பழனிசாமிக்கு வழக்கு தொடுக்க தார்மீக உரிமை கிடையாது என்றும், அ.தி.மு.க .கட்சி விதிகள் திருத்தம் செய்யப்பட்டதை இந்திய தலைமை தேர்தல் ஆணையமே ஏற்றுக் கொண்டதையும் வழக்கறிஞர்கள் சுட்டிக்காட்டினர். இந்நிலையில் எதிர்தரப்பு கருத்தையும் கேட்க விரும்புவதாக கூறிய நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் செப்டம்பர் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். 

Next Story

மேலும் செய்திகள்