அத்தி வரதர் உற்சவத்தின் நான்காம் நாள் - வரிசையில் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 4ஆம் நாளான இன்றைய தினம், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர்.
காஞ்சிபுரம் அத்தி வரதர் உற்சவத்தின் 4ஆம் நாளான இன்றைய தினம், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பெருமாளை தரிசனம் செய்தனர். அத்திவரதருக்கு திருவாராதனம் செய்து, வெண்பட்டு உடுத்தி, மலர்மாலை அணிவித்து, நெய் வேத்தியம் செய்யப்பட்டது. இதையடுத்து அதிகாலை 5 மணியில் இருந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அத்தி வரதரை வழிபட்டு வருகின்றனர். வரதராஜபெருமாள் கோயில் ஆனி உற்சவம் இன்று முதல் வருகிற 11ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி, காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே அத்தி வரதரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story