ஓய்வு பெற்ற டி.எஸ்.பி வீட்டில் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - வழக்கு பதிவு
ஓய்வு பெற்ற டி.எஸ்.பி வீட்டில், சிறுமி ஒருவர் வீட்டு வேலைக்காக அழைத்து வரப்பட்டு, கொடுமை செய்யப்பட்டதாக, புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள புதுப்பட்டியை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற காவல்துறை ஆய்வாளர் நல்லகுரும்பர். இவரது மனைவி தெய்வராணி தேனி, உச்சப்பட்டி பகுதியை சேர்ந்த 11 வயது சிறுமியை ஆதரவற்றோர் விடுதியில் இருந்து அழைத்து வந்து, வீட்டு வேலைக்கு அமர்த்தியதாக தெரிகிறது. இதுகுறித்து, தகவல் அறிந்த குழந்தைகள் நல அமைப்பினர், சிறுமியை மீட்டு, மதுரையில் உள்ள தனியார் காப்பகத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில், ஓய்வு பெற்ற டி.எஸ்.பி. மனைவி தெய்வராணி மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவான அவரை தேடி வருகின்றனர்.
Next Story