மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு

மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரி மனு
x
மதுராந்தகம் ஏரியில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனுவுக்கு தமிழக அரசு மற்றும் காஞ்சிபுரம் ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தின் 3 ஆவது பெரிய ஏரியாகிய மதுராந்தகம் ஏரி, 2 ஆயிரத்து 846 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகும்.  இந்த ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை சுற்றி 5 மீட்டர் உயரத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப கோரி வழக்கறிஞர் நிர்மல்குமார் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு, மனுவுக்கு 2 வாரங்களில் பதிலளிக்க தமிழக அரசு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்