நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான புதிய சட்டம் : சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவு
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, கடந்த 2015 ஆம் ஆண்டு தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. நிலம் கையகப்படுத்தும் மாநில நெடுஞ்சாலைகள் சட்டம், தொழில் பயன்பாட்டிற்கான நிலம் கையகப்படுத்தும் சட்டம் மற்றும் அரிஜன் நல சட்டம் உள்ளிட்டவற்றை பாதுகாக்க அரசு புதிய சட்டத்தை கொண்டு வந்தது. இதனை எதிர்த்து, ராமநாதபுரத்தை சேர்ந்த கருணாநிதி உள்ளிட்ட 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். கருத்து கேட்பு கூட்டம் நடத்தாமலேயே தமிழக அரசு நிலம் கையகப்படுத்தி வருவதாக மனுதாரர்கள் தெரிவித்தனர். இந்த
சட்டத்தை ரத்து செய்தால் சுமார் 80 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்கள் பாதிக்கப்படும் என தமிழக அரசு தரப்பு கூறியது. இந்நிலையில், விவசாயிகளின் வாதங்களை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது.
Next Story