மூதாட்டிக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்ட விவகாரம் : ரூ.50,000 இழப்பீடு வழங்க ஆட்சியருக்கு உத்தரவு

இறந்ததாக கூறி ஓய்வூதியம் மறுக்கப்பட்ட மூதாட்டிக்கு நிலுவையில் உள்ள ஓய்வூதியத்துடன், இழப்பீடாக 50,000 ரூபாய் வழங்க, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர்க்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மூதாட்டிக்கு ஓய்வூதியம் மறுக்கப்பட்ட விவகாரம் : ரூ.50,000 இழப்பீடு வழங்க ஆட்சியருக்கு உத்தரவு
x
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த சுந்தரம்மாள் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனுவினை தாக்கல் செய்திருந்தார்.  இந்த மனு இன்று நீதிபதி சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கமுதி தாசில்தார் பதில் மனுவினை தாக்கல் செய்திருந்தார், அதில் வேண்டுமென்று தாங்கள் அந்த தவறை மேற்கொள்ளவில்லை, தற்காலிக கணினி பணியாளர் செய்த தவறில் மனுதாரருக்கு வழங்கப்பட்ட முதியோர் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். விசாரணையின் முடிவில், கவனக்குறைவால் மனுதாரருக்கு  கடந்த 2015 ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நிறுத்தப்பட்ட ஓய்வூதிய நிலுவை தொகையை தற்போது வரை கணிக்கிட்டு  மனுதாரருக்கு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும், மனுதாரருக்கு இழப்பீடாக ஐம்பதாயிரம் ரூபாயை, மாவட்ட ஆட்சியர் இரண்டு வாரங்களுக்குள் வழங்க உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்