பெருந்துறை குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி

ஈரோடு மாவட்டம், பெருந்துறை குடிநீர் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
பெருந்துறை குடிநீர் திட்டத்திற்கு எதிர்ப்பு : விவசாயிகளுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி
x
ஈரோடு மாவட்டம், பெருந்துறை குடிநீர் திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. குடிநீர் கொண்டு செல்ல 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பெருந்துறை கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்த முடிவு எடுக்கப்பட்டது.  இதற்காக வாய்க்காலுக்கு தண்ணீர் செல்லும் முகப்பு பகுதியில் 20 ஆடி ஆழ கிணறு தோண்டப்பட்டுள்ளது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், கிணறை வேறு பகுதிக்கு மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோபிசெட்டிபாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்டஆட்சியர் கதிரவன் தலைமையில் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இதில் கிணறு இடம்பெறும் பணியை மாற்ற இயலாது என்றும், குடிநீர் பிரச்சினை என்பதால் விவசாயிகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கையை விவசாயிகள் ஏற்க மறுத்துவிட்டதால், பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

Next Story

மேலும் செய்திகள்