குன்றுத்தூர் : குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சாலைமறியல்
சென்னை பூவிருந்தவல்லி அடுத்த குன்றுத்தூர் திருமுடிவாக்கம் பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சென்னை பூவிருந்தவல்லி அடுத்த குன்றுத்தூர் திருமுடிவாக்கம் பகுதியில் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 20 லட்சம் ரூபாய் முதல் 80 லட்சம் ரூபாய் வரை கொடுத்து வீடுகளை வாங்கி குடியிருப்பதாகவும், ஆனால், கட்டுமான நிறுவனம் குடியிருப்பு பராமரிப்பை தொடர்வதாகவும் கூறுகிறார்கள். குடியிருப்பு பராமரிப்பை கைவிட்டு வெளியேற வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு, எதிர்ப்பு தெரிவித்த கட்டுமான நிறுவனம், அடியாட்கள் மூலம் சிலரை, தாக்கியதாக கூறப்படுகிறது. இதைக் கண்டித்து, குடியிருப்போர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததை அடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.
Next Story