விபத்தில் இறந்த மாணவிக்கு இழப்பீடு கோரிய வழக்கு : முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு அபராதம் - உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிகளின்படி பாதுகாப்பு குழு அமைக்காத தனியார் மழலையர் பள்ளி தாளாளர், விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு, தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விபத்தில் இறந்த மாணவிக்கு இழப்பீடு கோரிய வழக்கு : முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு அபராதம் - உயர்நீதிமன்றம் உத்தரவு
x
பள்ளி பேருந்துகள் ஒழுங்குமுறை விதிகளின்படி பாதுகாப்பு குழு அமைக்காத தனியார் மழலையர் பள்ளி தாளாளர், விழுப்புரம் முதன்மை கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு, தலா 10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பள்ளி வாகனம் ஏறி பலியான சிறுமிக்கு, இழப்பீடு கோரி தாய் அஞ்சலி தேவி என்பவர் வழக்கு தொடர்ந்தார். 2017ஆம் ஆண்டு திண்டிவனத்திலுள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. படித்த யுவஸ்ரீ, பள்ளி வாகனம் ஏறி பலியானார். இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் அளித்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க கோரி தாய் அஞ்சலிதேவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், 25 லட்ச ரூபாய் இழப்பீடு கோரிக்கை மீது மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் தான் முடிவு செய்ய வேண்டுமெனவும் உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்