அடிப்படை வசதி இல்லை என மலை கிராம மக்கள் வேதனை

சாலை, குடிநீர், பள்ளி பேருந்து போக்குவரத்து ஆகிய வசதிகளை இதுவரை பார்த்திராத கிராமம் ஒன்று உள்ளது.அந்த கிராமம் பற்றியும் அங்கு வசிப்பவர்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சினைகள் குறித்தும் விவரிக்கிறது இந்த தொகுப்பு
அடிப்படை வசதி இல்லை என மலை கிராம மக்கள் வேதனை
x
அடர்ந்த வனம், இரு மருங்கிலும் மரம்செடி கொடிகள், ஒற்றையடி பாதை, அதைக் கடந்தால் குண்டுகுழி நிறைந்த மண்சாலை என மொத்தமாக பத்து கிலோ மீட்டர் கடந்தால், மலைகளின் நடுவே உள்ளது குருவம்பட்டி என்ற கிராமம்.சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே சேர்வராயன் மலைத் தொடரில் தீவு போல் அமைந்துள்ளது இந்தக் கிராமம். அங்கு உருவாகும் சரபங்கா நதியின் ஆசியில், பசுமை தழைத்து காணப்படும் அந்த கிராமத்தில் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். ஆனால், கிராமத்துக்கு, அடிப்படை வசதிகள் ஏதும் இதுவரை சேரவில்லை. மருத்துவம், தார் சாலைகளை அறிந்ததில்லை.  ரேஷன் கடை உள்ள வட்டக்காடு கிராமத்துக்கு செல்ல 6 கிலோ மீட்டர், 5ஆம் வகுப்புக்கு மேல் படிக்க 10 கிலோ மீட்டர், மழைக் காலங்களில் சரபங்கா நதி வடியும் வரை வெளியேற முடியாத நிலை என ஏகத்துக்கும் முடங்கி கிடக்கிறது அவர்களின் வாழ்க்கை.இயற்கை அருளிய ஊராக இருந்தாலும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத கிராமம் என்பதால், பலர் வெளியேறிவிட்டனர். சாலை அமைத்து, காலை, மாலை இருவேளைகளில் மட்டுமாவாது பேருந்து வசதி, வாரத்துக்கு ஒருமுறை மருத்துவ சேவை, விளையாட்டுத் திடல், சரபங்கா ஆற்றின் குறுக்கே பாலம், தரமான குடிநீர், தெருவிளக்கு என, பார்த்திராத பல அடிப்படை தேவைகளை கேட்டு காத்துக் கிடக்கிறது அந்த கிராமம்

Next Story

மேலும் செய்திகள்