தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக திட்டத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை - காமராஜ்
"ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை" விவகாரத்தில் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று, "ஒரே நாடு ஒரே ரேசன் அட்டை" திட்டம் குறித்து திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. இந்த தீர்மானத்தின் மீது பேசிய திமுக எம்.எல்.ஏ.,எ.வ.வேலு, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை" திட்டம் தமிழ்நாட்டில் செயல்படுத்தப்பட்டால், தமிழகத்திற்கு நிதி சுமை அதிகம் ஏற்படும் என்றார்.வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமிழ்நாட்டில் ரேஷன் பொருட்களை பெற வேண்டும் என்றால் முன்னுரிமை அட்டைகளுக்கு மட்டும் தான் அத்தியாவசிய பொருட்கள் வழங்க முடியும் என கூறினார்.அவர்களுக்கு விலையில்லாமல் பொருட்கள் வழங்க முடிவு செய்தால், அது மாநில அரசுக்கு கூடுதல் செலவாகும் என்றும் அமைச்சர் காமராஜ் குறிப்பிட்டார்.தற்போதுள்ள நடைமுறைப்படி மற்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வருகை தந்து குடும்ப அட்டை கோருவோர், அவர்களது சொந்த மாநிலத்தில் இருந்து சான்றிதழ் பெற்று இங்கு பதிவு செய்து, மனு அளிப்போருக்கு மட்டுமே ஆய்வுக்கு பின் குடும்ப அட்டைகள் வழங்கி அதன் பின்னர் பொருட்கள் வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.தமிழ்நாட்டில் தற்போது செம்மையாக செயல்படுத்தப்பட்டு வரும் பொது விநியோக திட்டத்துக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் தமிழக அரசு முடிவெடுக்கும் என்று உறுதியளித்தார்.மேலும், இலவச அரிசி வழங்கும் திட்டத்தை இந்த அரசு தொடர்ந்து செயல்படுத்தும் எனவும் அமைச்சர் காமராஜ் கூறினார்.
Next Story