எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை அதிகரிப்பு
எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான உதவித் தொகை ஆறாயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
எட்டாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கான உதவித் தொகை ஆறாயிரம் ரூபாயில் இருந்து 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதாக அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவர்களது பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்கும் நிலையில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை பெறுவதற்கான தேர்வு எழுதலாம். இந்த உதவித் தொகை நடப்பு கல்வி ஆண்டு முதல் 12 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் ஆண்டுதோறும் ஆறாயிரத்து 695 மாணவர்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
Next Story