கஜா நிவாரணம் கேட்டு தென்னை விவசாயி தர்ணா : காவலர்கள் நடுவே நடுங்கும் மகள்களுடன் ஆர்ப்பாட்டம்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கஜா புயல் நிவாரணம் வழங்க கோரி 3 மகள்களுடன் தென்னை விவசாயி ஒருவர் கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வீசிய கஜா புயல், தென்னை உள்ளிட்ட மரங்களை முறித்து வீசியதில், தஞ்சை மாவட்டம் பேராவூரணி சுற்றுப் பகுதிகளில் பலரின் வாழ்வாதாரம் கேள்வி குறியானது. நிர்கதியான தங்களை திரும்பி பார்க்கவே இல்லை என குற்றம்சாட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமது 3 மகள்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் பேராவூரணியைச் சேர்ந்த ரவிச்சந்திரன். 5 ஏக்கர் நிலத்தில் இருந்த 350 தென்னை மரங்கள், கஜா புயலில் நாசமானது. அவை குறித்து கணக்கெடுத்து நிவாரணம் வழங்கப்படவில்லை. மனு கொடுத்தும் அதிகாரிகள் செவிசாய்க்கவில்லை. நவம்பர் மாதம் வீசிய கஜாவில் இருந்து மீளமுடியாமல் தவிப்பதாகவும், இதுவரை நிவாரணம் வழங்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டிய அவர், சாப்பாட்டுக்கே வழியில்லை என்றார்.
Next Story