சென்னை : மருத்துவர் இல்லத்தில் 70 சவரன் நகை கொள்ளை
சென்னை பெரம்பூரில் ரயில்வே மருத்துவர் குமார் வீட்டில், மர்ம நபர்கள் 70 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர்.
சென்னை பெரம்பூரில் ரயில்வே மருத்துவர் குமார் வீட்டில், மர்ம நபர்கள் 70 சவரன் நகையை கொள்ளையடித்து சென்றனர். வீட்டில் உரிமையாளர் இல்லாததை அறிந்த மர்மநபர்கள் கைவரிசையை காட்டியுள்ளனர். தகவல் அறிந்து அங்கு வந்த ஐசிஎஃப் போலீசார், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்து சென்றனர். ரயில்வே குடியிருப்பு வளாகத்தில் ஒரு சி.சி.டி.வி. கேமரா கூட இல்லாததால், கொள்ளையர்களை அடையாளம் காணுவதில் போலீஸாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Next Story