பலத்த காற்று - காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு

தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் காரணமாக காற்றாலைகளில் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது.
பலத்த காற்று - காற்றாலை மின் உற்பத்தி அதிகரிப்பு
x
தேனி மாவட்டத்தில் காற்றின் வேகம் காரணமாக காற்றாலைகளில் மின்உற்பத்தி அதிகரித்துள்ளது. கேரளாவில் தென் மேற்கு பருவமழை தொடங்கியதையடுத்து தேனி மாவட்டம் தேவாரம், சங்கராபுரம், நாகலாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இதன் காரணமாக ஒரு காற்றாலையின் சராசரி மின்உற்பத்தி 25 ஆயிரம் யூனிட்டாக அதிகரித்துள்ளது. வீசும் காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், மின்சார உற்பத்தி அடுத்த சில நாட்களில் உச்சக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்