"தண்ணீர் லாரிகள் பதிவு செய்வதை கட்டாயமாக்குங்கள்" - மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
தண்ணீர் லாரிகள் பதிவு செய்வதை கட்டாயமாக்கி அறிவிப்பாணை வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுப்பதை தடுக்க கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் எடுக்கப்படுவதை நேரில் ஆய்வு செய்ய வழக்கறிஞர் ஆணையரை உயர்நீதிமன்றம் நியமனம் செய்தது.வர்த்தக பயன்பாட்டிற்காக நிலத்தடி நீரை எடுத்து வழங்குவதற்கு உரிமம் பெற்றுள்ள லாரிகளின் விவரங்களை தாக்கல் செய்ய அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆணையருக்கு விவரங்களை வழங்க மறுத்தால் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Next Story