"ஒரே நாடு ஒரே வரி சட்டம் - சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழகம்" : அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு

ஒரே நாடு ஒரே வரி சட்டத்தை தமிழக அரசு சவாலாக ஏற்று, மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுத்தி வருவதாக அமைச்சர் கே .சி.வீரமணி தெரிவித்துள்ளார்.
ஒரே நாடு ஒரே வரி சட்டம் - சிறப்பாக செயல்படுத்தி வரும் தமிழகம் : அமைச்சர் கே.சி.வீரமணி பேச்சு
x
ஒரே நாடு ஒரே வரி சட்டத்தை தமிழக அரசு சவாலாக ஏற்று, மற்ற மாநிலங்களைவிட சிறப்பாக செயல்படுத்தி வருவதாக அமைச்சர் கே .சி.வீரமணி தெரிவித்துள்ளார். ஜி.எஸ்.டி வரிவதிப்பு முறை  அமல்படுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி , சென்னை நுங்கம்பாக்கத்தில் ஜி.எஸ்.டி. பவனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கடந்த காலங்களை விட வரி வருவாய் உயர்ந்து உள்ளதாகஅவர்  கூறினார். 65 ஆயிரம் கோடியாக இருந்த வரி வருவாய் ஜிஎஸ்டி அமலுக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் 88 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதாகவும் அமைச்சர் வீரமணி குறிப்பிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்