சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு வந்த பக்தர் மரணம்
சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சதுரகிரி மலையில் உள்ள சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பிரதோஷத்தை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். இந்நிலையில் விருத்தாசலத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்ற பக்தர் கோயிலுக்குச் செல்லும் போது யானைக்கள் பகுதியில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story