அரசு பள்ளியை தத்தெடுத்த மூன்று பெண்கள்...

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே பேய்குளம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியை மூன்று பெண்கள் தத்தெடுத்து மாணவர்களுக்கு, விளையாட்டு போட்டிகள் நடத்தினர்.
x
துபாயில் நடைபெற்ற சர்வதேச போட்டியில் இறகுப்பந்து பிரிவில் தங்கம் பதக்கம் வென்ற திவ்யபாரதி, சிலம்பாட்ட வீராங்கனை சங்கீதா மற்றும் அமெரிக்காவில் ஆசிரியராக பணிபுரிந்து வரும் சங்கரி ஆகியோர் இணைந்து பள்ளி மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக விளையாட்டு போட்டி நடத்த முடிவு செய்தனர். அதன்படி, பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம், மல்யுத்தம், தொடர் ஓட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கினர்.  இது குறித்து பேசிய வீராங்கனை சங்கீதா, மாணவர்களின் விளையாட்டு திறனை ஊக்குவிக்கும் நோக்கத்திலேயே இந்த போட்டியை நடத்தியதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்