பட்ஜெட்டில் ஒரு ரூபாய் எங்கிருந்து வருகிறது ? எப்படி செலவாகிறது ?
நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் ஜூலை 5 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், மொத்த வரவு செலவில், ஒரு ரூபாயில் அரசின் வருவாய் மற்றும் செலவுகள் என்ன
மத்திய பட்ஜெட்டில், மொத்த வரவுகளில் ஒரு ரூபாயில் கடன் அல்லாத மூலதன வரவு மூலம் 3 காசுகள் கிடைக்கிறது. கடன் மற்றும் இதர பாக்கிகள் மூலம் 19 காசுகளும், பெரு நிறுவனங்கள் வருமான வரியாக 21 காசுகளும் அரசுக்கு வருவாய் கிடைக்கிறது. வருமான வரி மூலம் 17 காசுகளும், கலால் வரி மூலம் 7 காசுகளும் கிடைக்கிறது. ஜி.எஸ்.டி வழியாக 21 காசுகளும், வரி அல்லாத வரவாக 8 காசுகளும் அரசின் நிதி ஆதாரங்களாக உள்ளன.
மொத்த செலவுகளில் , ஒரு ரூபாயில் ஓய்வூதியமாக 5 காசுகளும், மத்திய அரசின் உதவி பெறும் திட்டங்களுக்கு 9 காசுகளும் செலவிடப்படுகின்றன. மத்திய அரசு திட்டங்களுக்கு 12 காசுகள், கடன்களுக்கான வட்டியாக 18 காசுகள், ராணுவத்துக்கு 8 காசுகள் ஒதுக்கப்படுகின்றன. மானியங்களுக்கு 9 காசுகளும், நிதி கமிசன் மற்றும் இதர ஒதுக்கீடுகளாக 8 காசுகளும், வரிகளில் மாநில அரசுகளின் பங்காக 23 காசுகளும் செலவாகின்றன. திட்டமல்லாத இதர செலவுகளுக்கு 8 காசுகள் ஒதுக்கப்படுகின்றன.
Next Story