மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மேம்படுத்த தமிழகம் முழுவதும் குழுக்கள் அமைப்பு - எஸ்.பி.வேலுமணி
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மேம்படுத்த தமிழகம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.
மழை நீர் சேகரிப்பு திட்டத்தை மேம்படுத்த தமிழகம் முழுவதும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்தார். மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்த செய்முறை கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில், வார்டு வாரியாக நியமிக்கப்பட்டு உள்ள செயற்பொறியாளர், பொறுப்பாளர்களுக்கு மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு குறித்து விளக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்பி. வேலுமணி, சென்னையில் ஒவ்வொரு வார்டிலும் புதிதாக ஆயிரம் மழை நீர் தொட்டிகள் அமைக்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.
Next Story