பிளாஸ்டிக் பயன்படுத்திய கடைகளுக்கு ரூ.25000 அபராதம்
ஊட்டி நகர்ப்புற பகுதிகளில் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகிப்பதாக நகராட்சிக்கு புகார் சென்றது.
இதனையடுத்து நகர்ப்புற பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் ஹோட்டல்களில், ஊட்டி நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரி முரளி தலைமையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த கடைகளில், பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்கப்பட்டது கண்டு பிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் உபயோகித்த கடைகாரர்களுக்கு அபராதம் விதித்ததில் சுமார் ரூ 25 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது.
Next Story