குடும்ப தகராறு காரணமாக ஒரே புடவையில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் குடும்ப பிரச்சனையால் கணவன் மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக ஒரே புடவையில் கணவன், மனைவி தூக்கிட்டு தற்கொலை
x
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தில் குடும்ப பிரச்சனையால் கணவன் மனைவி இருவரும் ஒரே புடவையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாமியார் மடம் பகுதியில் வசித்து வந்த மதன், கவுசல்யா தம்பதிக்கு வெற்றிமாறன் என்ற 9 வயது மகனும், பிரவீனா என்ற 7 வயது மகளும் உள்ளனர். இந்நிலையில், கணவன், மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதால் மணமுடைந்து இருவரும் ஒரே புடவையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டனர். பள்ளி முடிந்து வந்த குழந்தைகள், அப்பாவும், அம்மாவும் தூக்கில் தொங்கியதை கண்டு கதறினர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பெற்றவர்களை பறிகொடுத்த மகன் வெற்றிமாறன் மகள் பிரவீனா இருவரும் அப்பாவிகள் போல தவித்தது அப்பகுதி மக்களை கண்கலங்க செய்தது.

Next Story

மேலும் செய்திகள்