வீரப்பன் நடமாட்டம் இருந்ததால், நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை : முதன்மை வனப்பாதுகாவலர் பேச்சால் பரபரப்பு
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நில ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதற்கு சந்தன கடத்தல் வீரப்பனின் நடமாட்டமும் ஒரு காரணம் என, முதன்மை வனப்பாதுகாவலர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் நில ஆக்கிரமிப்பு செய்யாமல் இருப்பதற்கு சந்தன கடத்தல் வீரப்பனின் நடமாட்டமும் ஒரு காரணம் என, முதன்மை வனப்பாதுகாவலர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், வனவிலங்கு கணக்கெடுப்பு 29 ஆம் தேதி, துவங்கி ஜூலை 4 ம் தேதி வரை 7 நாள் நடைபெற உள்ளது. இதற்கான, ஒரு நாள் பயிற்சி முகாம்,சத்தியமங்கலம் பண்ணாரிஅம்மன் கோவில் வளாகத்தில் நடைபெற்றது. வனச்சரக அலுவலர்கள், வனத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர், இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். கூட்டத்தில் பேசிய முதன்மை வனப்பாதுகாவலர் நாகநாதன், வீரப்பன் நடமாட்டம் இருந்ததால், நில ஆக்கிரமிப்பு செய்பவர்களுக்கு பெரிய தடையாக இருந்ததாக கூறினார்.
Next Story