சட்டவிரோதமாக எடுக்கப்படும் நிலத்தடி நீர் குறித்த வழக்கு : ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சட்ட விரோதமாக நிலத்தடி நீரை எடுத்தால், அந்த இடத்தில் உள்ள மோட்டார்கள், வாகனங்களை பறிமுதல் செய்ய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், கவுரிவாக்கத்தில் உள்ள விவசாய நிலத்தில் சட்டவிரோதமாக, நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்படுவதை தடுக்க கோரி, அந்த பகுதியை சேர்ந்த நாகேஸ்வர ராவ், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வு, இந்த இடத்தில் அனுமதி பெற்று நீர் எடுக்கப்படுகிறதா? என்பது குறித்தும், தண்ணீர் வணிக ரீதியில் பயன்படுத்தப்படுகிறா, சொந்த தேவைக்காக பயன்படுத்தப்படுகிறதா, என்பது குறித்தும் ஆய்வு நடத்த உத்தரவிட்டனர். சட்டவிரோதமாக நீர் எடுக்கப்பட்டது உறுதியானால், அங்குள்ள மோட்டார்கள், தண்ணீரை கொண்டு செல்ல பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்ய ஆட்சியருக்கு, நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுத்தவர்கள் மீது பதிவுசெய்யப்பட்ட வழக்குகள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யவும், காஞ்சிபுரம் ஆட்சியருக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 1-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Next Story