பிரியாவிடை பெற்ற சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பணி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, விவசாயிகள் அவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் ரோகிணி பணி இடமாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, விவசாயிகள் அவருக்கு கண்ணீர் மல்க பிரியாவிடை அளித்தனர். கடந்த 2017- ம் ஆண்டு சேலம் மாவட்டத்தின் முதல் பெண் ஆட்சியராக ரோகிணி பதவியேற்றார். பல்வேறு பணிகளில் தீவிரமாக அவர் பணியாற்றி வந்ததால், மக்கள் மனதில் இடம் பிடித்தார். இந்நிலையில், இசைப் பல்கலைக் கழக பதிவாளராக, அவரை தமிழக அரசு பணியிட மாற்றம் செய்தது. இதனிடையே, சேலத்தில் நடைபெற்ற விவசாயிகள் குறை தீர் கூட்டத்தில் பங்கேற்ற ஆட்சியர் ரோகிணி, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது விவசாயிகள் பலர், ரோகிணியின் பணியிட மாறுதலுக்கு வருத்தம் தெரிவித்து உணர்ச்சி பூர்வமாக வாழ்த்தினர்.
Next Story