போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணிளை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் : ஒருமணி நேர விதிமுறை வகுப்பு எடுத்த போக்குவரத்து போலீசார்

விதிமுறைகளை மீறிய ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, போக்குவரத்து போலீசார் பயிற்சி வகுப்பெடுத்தனர்.
போக்குவரத்து விதிமுறைகளை மீறி பயணிளை ஏற்றி வந்த ஆட்டோ ஓட்டுநர்கள் : ஒருமணி நேர விதிமுறை வகுப்பு எடுத்த போக்குவரத்து போலீசார்
x
திருச்சி மாநகரில், போக்குவரத்து விதிகளை மீறிய 58 ஆட்டோக்களை ஓட்டுநர்களுடன், போக்குவரத்து போலீசார், ஆட்சியர் அலுவலகம் அருகில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள  குழந்தைகள் போக்குவரத்து பூங்காவிற்கு கொண்டு வந்தனர். அங்கு, ஆட்டோ ஓட்டுநர்களுக்கு, மாநகரில் எவ்வாறு ஆட்டோக்களை இயக்கவேண்டும், பாதுகாப்பான முறையில் பயணிகளை ஏற்றிச்செல்வது குறித்தும், சாலை பாதுகாப்பு குறியீடு குறித்தும் சுமார் ஒருமணி நேரம் வகுப்பு எடுத்ததனர். மேலும், விதிமுறைகளை மீறி இயக்கினால் ஓட்டுநர்களின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அவர்களை எச்சரித்து அனுப்பினர். அனுமதிக்கப்பட்ட அளவுக்கு அதிகமாக பயணிகளை, மாணவர்களை ஏற்றக்கூடாது என்றும் போலீசார் அறிவுரை வழங்கினர்.

Next Story

மேலும் செய்திகள்