டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வாருங்கள் : லாரி உரிமையாளர்கள் மத்திய அரசுக்கு கோரிக்கை
'டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்' என்று, லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
'டீசல் விலையை ஜி.எஸ்.டி. வரம்புக்குள் கொண்டு வரவேண்டும்' என்று, லாரி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் சங்ககிரியில் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் மகா சபை கூட்டம் நடைபெற்றது. இதில், திம்பம் மலைப்பகுதியில் 24 மணிநேரமும் சுங்கவசூல் இல்லாமல் செல்லலாம் என அறிவித்த தமிழக முதலமைச்சருக்கு, நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகம் சனிக்கிழமையும் பணிநாளாக அறிவிக்க வேண்டும் என்றும் இந்த கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
Next Story