"நல்ல திட்டங்களை எதிர்ப்பதா?" - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி

நல்ல திட்டங்களை எதிர்த்து ஆர்ப்பாட்டம், போராட்டங்கள் நடத்துவது ஏன்?' என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
நல்ல திட்டங்களை எதிர்ப்பதா? - சென்னை உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
x
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.ம.மு.க சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி, அக்கட்சியின் கடலூர் மாவட்ட செயலாளர் பாலமுருகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, 'பொது மக்களுக்கும் போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படும் என்பதால் போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்ததாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, 'ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு என மனுதாரர் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். 'அரசியல் ஆதாயத்திற்காகவே நடத்தப்படும் இதுபோன்ற போராட்டங்கள், மாநிலத்தை பின்னோக்கி எடுத்துச்செல்லும்' என, நீதிபதி கவலை தெரிவித்தார், 'தமிழகத்திற்கு வரும் எல்லா திட்டங்களுக்கும் போராட்டம் என்றால், எந்த திட்டத்தைத் தான் நிறைவேற்றுவது' என்றும் நீதிபதி கேள்வி எழுப்பினார். ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் என்ன பாதிப்பு என்பதை முழுவதுமாக ஆராய்ச்சி செய்து விட்டு வெள்ளிக்கிழமையன்று, பதில் அளிக்க மனுதாரர் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு தள்ளி வைத்தார்.

Next Story

மேலும் செய்திகள்