மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்க : கடலூர் ஆட்சியரிடம் ராதிகா பெற்றோர் மனு

தமது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களை, ஜாமினில் வெளியே விடக்கூடாது என, அண்மையில் தற்கொலை செய்து கொண்ட ராதிகாவின் பெற்றோர், கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
மகளின் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்க : கடலூர் ஆட்சியரிடம் ராதிகா பெற்றோர் மனு
x
தமது மகளின் தற்கொலைக்கு காரணமானவர்களை, ஜாமினில் வெளியே விடக்கூடாது என, அண்மையில் தற்கொலை செய்து கொண்ட ராதிகாவின் பெற்றோர், கடலூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். மிகவும் ஏழ்மையான நிலையில் உள்ள தங்களுக்கு, இரண்டு பெண்ணையும் ஒரு மகனையும் காப்பாற்றும் விதமாக, அரசு வேலை வழங்கவும், அதுவரை இடைக்கால நிவாரண  நிதி வழங்கவும் கோரிக்கை வைத்தனர். ஆட்சியரை சந்தித்து மனு அளித்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய ராதிகாவின் தாய், எந்த தவறும் செய்யாத தங்கள் மகள் தற்கொலைக்கு தூண்டப்பட்டு, தற்கொலை செய்து கொண்ட நிலையில், அதற்கு காரணமானவர்கள் வெளியே வரவிடாமல், உரிய தண்டனை வாங்கித்தர வேண்டும் என ஆட்சியரிடம் கோரியதாகவும், உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதி அளித்துள்ளதாகவும் கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்