மூன்று வயது குழந்தையை நாய் கடித்தது : மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது பரிதாபம்
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த 3 வயது பெண் குழந்தையை நாய் கடித்த நிலையில், தாமதமாக சிகிச்சை அளித்ததாக பெற்றோர் புகார் தெரிவித்தனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்த கூலித்தொழிலாளி ஹரிஹரனின், 3 வயது பெண் குழந்தை புனிதவள்ளி காய்ச்சல் காரணமாக, உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், புனிதவள்ளி, மருத்துவமனை முன் வந்தபோது, அங்கு சண்டையிட்டுக் கொண்டிருந்த நாய்களில் ஒன்று, அவரைக் கடித்தது. குழந்தையின் சத்தம் கேட்டு ஓடி வந்த ஹரிஹரன், நாய்களை துரத்தி விட்டார்.
இதையடுத்து புனிதவல்லிக்கு சிகிச்சை அளிக்குமாறு கேட்டதற்கு செவிலியர் அலட்சியமாக பதிலளித்ததாக கூறிய ஹரிஹரன், பத்திரிகையாளருக்கு தகவல் அளித்தார். பத்திரிகையாளர் செய்தி சேகரித்த போதுதான், புனிதவல்லிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசு மருத்துவமனையில் இதுபோன்று அலட்சியமாக நடந்து கொள்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், சுற்றித் திரியும் நாய்களை அப்புறப்படுத்த வேண்டும் என்றும், ஹரிஹரன் கோரிக்கை விடுத்தார்.
Next Story