ரூ.1250 கோடி மதிப்பில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் - முதலமைச்சர் அடிக்கல் நாட்டுகிறார்
சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் 3 வது திட்டத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
சென்னையின் குடிநீர் தேவைக்காக கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலி பகுதியில் ஆயிரத்து 250 கோடி ரூபாய் மதிப்பில், திட்டம் துவங்கப்பட உள்ளது. இதன் மூலம், கூடுதலாக 150 மில்லியன் லிட்டர் குடிநீர் கிடைக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காலை 10.30 மணிக்கு நடைபெறும் நிகழ்ச்சியில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்குகிறார். உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அமைச்சர் பெஞ்சமின் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.
Next Story