சென்னைக்கு மீண்டும் தொடங்கியது, குடிநீர் விநியோகம்
திருவள்ளூரில் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி மீண்டும் தொடங்கியது.
திருவள்ளூரில் விவசாய கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையால், சென்னைக்கு குடிநீர் அனுப்பும் பணி மீண்டும் தொடங்கியது.
திருவள்ளூர் மாவட்டத்தில் தாமரைப்பாக்கம், மாகரல், கீழானூர், புல்லரம்பாக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில், விவசாயத்துக்கு பயன்படுத்தப்பட்டு வரும் ஆழ்துளை கிணறுகளில் இருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனை, தொட்டியில் சேகரித்து, அங்கிருந்து ராட்சத குழாய் மூலமாக மாகரல், புழல் உள்ளிட்ட நீரேற்று நிலையத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இதனிடையே, விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுப்பதற்கு விவசாய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் புல்லரம்பாக்கம் பகுதியில் விவசாய கிணறுகளில் தண்ணீர் எடுப்பது கடந்த சில நாட்களாக நிறுத்தப்பட்டது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார், விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து தற்போது, புல்லரம்பாக்கம் விவசாய கிணறுகளில் இருந்து, மீண்டும் தண்ணீரை எடுத்து, சென்னைக்கு விநியோகம் செய்யும் பணி தொடங்கி உள்ளது.
Next Story