திருவிடைமருதூர் : இந்தியாவில் முதல் முறையாக வடிவமைக்கப்பட்ட சுவாமி விமானம்
இந்தியாவிலேயே முதல் முறையாக, 200 கிலோ பித்தளையால் வடிவமைக்கப்பட்ட கோயில் விமான வாகனம், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு, அனுப்பி வைக்கப்பட உள்ளது.
தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூரில் உள்ள சிற்பக்கூடத்தில் இதனை தயாரிக்கும் பணி கடந்த 2 மாதங்களாக, நடைபெற்றது. சுத்தமான பித்தளையில் இதனை செய்து கொடுக்குமாறு, திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் கேட்டதன் பேரில், 200 கிலோ பித்தளையில் இது செய்யப்பட்டுள்ளது. ஏரோபிளேன் வடிவத்தில், ஐந்தரை அடி அகலம், 6 அடி நீளத்தில் உருவாகி வரும் இந்த வாகனத்தை, ஸ்தபதி விஜயகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் செய்தனர். சுவாமி வீதியுலா புறப்பாட்டிற்கு, இந்த விமான வாகனம் பயன்படுத்தப்பட உள்ளது. 2 நாட்களில் இது, திருச்செந்தூருக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
Next Story