எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சாலை விரிவாக்கப் பணி தொடக்கம்
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சாலை விரிவாக்கப் பணி தொடங்கப்பட்டுள்ளது.
மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனைக்காக சாலை விரிவாக்கப் பணி தொடங்கப்பட்டுள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு எவ்வித பணியும் தொடங்கப்படவில்லை. இந்நிலையில், மத்திய சாலை நிதித் திட்டத்தின் கீழ் 21 கோடியே 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு சாலை விரிவாக்கும் பணி நடைபெறுகிறது. இதன் முதற்கட்டமாக சாலையின் நடுவே உள்ள பாலங்களை முதலில் கட்டுவதற்காக பழைய பாலங்களை எல்லாம் இடிக்கப்பட்டு புதிதாக பாலங்கள் கட்டும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. எய்ம்ஸ் மருத்துவமனைக்கு செல்லும் சாலை விரிவாக்கப் பணி நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Next Story