பொள்ளாச்சி : பள்ளி மாணவிகளை செல்போனில் படம்பிடித்து காதலிக்குமாறு மிரட்டல் - 5 இளைஞர்கள் கைது

பள்ளி மாணவிகளை, செல்போனில் படம்பிடித்து காதலிக்குமாறு மிரட்டிய 5 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
பொள்ளாச்சி : பள்ளி மாணவிகளை செல்போனில் படம்பிடித்து காதலிக்குமாறு மிரட்டல் - 5 இளைஞர்கள் கைது
x
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆனைமலை பகுதியை சேர்ந்தவர் முகமது சபீர். இவர் தமது நண்பர்கள் 4 பேருடன் சேர்ந்து, பள்ளி மாணவிகளை வழி மறித்து செல்ஃபோன்களில் படம் பிடித்து காதலிக்க சொல்லி தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், மாணவிகளின் புகைப்படங்களை சமூக வலை தளங்களில் வெளியிட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட மாணவிகள், தங்கள் பெற்றோரிடம் கூறியதையடுத்து காவல் நிலையத்தில் அவர்கள் புகார் அளித்தனர். புகாரின் பேரில் வழக்குப்பதிவு  செய்த போலீசார் முகமது சபீர் மற்றும் அவரது நண்பர்கள் முகமது ரியாசுதீன், வசந்தகுமார், முகமது யூசுப், கமர்தீன், ஆகிய 5 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 5 செல்போன்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் 5 பேரும் பள்ளி மாணவிகளை காதலிக்க மிரட்டியதோடு தட்டிக் கேட்ட மாணவிகளின் பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. கைது செய்யப்பட்டவர்களில் முகமது சபீரை, போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் அவரை பொள்ளாச்சி நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீதமுள்ள 4 நபர்களும் பொள்ளாச்சி மற்றும்  கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story

மேலும் செய்திகள்