"திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு"
ராஜராஜன் சோழன் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியது தொடர்பான வழக்கில் இயக்குநர் பா. ரஞ்சித்திற்கு முன்ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாளில் கடந்த ஜூன் 5-ம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற இயக்குனர் பா. ரஞ்சித், ராஜராஜ சோழன் ஆட்சிக்காலம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு பா. ரஞ்சித் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ராஜமாணிக்கம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜூன் 6 ஆம் தேதி ரஞ்சித் பேசியபோது எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனையும் ஏற்படாத நிலையில் 11ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டதாகவும் ஆகவே ரஞ்சித்துக்கு ஜாமீன் வழங்குமாறும் கோரினார். அப்போது இயக்குனர் ரஞ்சித்திற்கு ஜாமீன் வழங்க கூடாது என்று எதிர் தரப்பு சார்பில் வாதிடப்பட்டது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நிதீபதி, இனி வரும் காலங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசக்கூடாது என்று கூறி, இயக்குனர் ரஞ்சித்துக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இனி வரும் காலங்களில் இது போன்று பேசினால், முன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி தொடர்புடைய மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி அப்போது தெரிவித்தார்.
Next Story