முதலமைச்சர் பழனிசாமியின் 30 நிமிடம் அதிரடி பேட்டி

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
x
தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினை குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்களும், அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.  கூட்டத்துக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்,  குடிநீர் பிரச்சினையை தீர்க்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் எடுத்து வருவதாகக் கூறினார். பருவ மழை குறைந்ததன் காரணமாக,  சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகள் வறண்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். கேரளாவில் இருந்து தண்ணீர் அளிப்பதாக அம்மாநில அரசின் கோரிக்கையை மதிப்பதாகவும், தினசரி 2 மில்லியன் லிட்டர் தண்ணீர் அளித்தால் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும் கூறினார்.



Next Story

மேலும் செய்திகள்