உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாமல் தவிக்கும் ஒசூர் மாநகராட்சி
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில், தற்போது வரை உள்ளாட்சி பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளாட்சி அமைப்புகள் எந்த மாதிரியான பாதிப்புகளுக்கு உள்ளாகியிருக்கிறது என்பதைச் விளக்குகிறது, இந்த தொகுப்பு...
ஓசூர் நகராட்சி கடந்த மார்ச் மாதம் 1 ஆம் தேதி தமிழகத்தின் 13- ஆவது மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் ஓசூர் மாநகராட்சி 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு , குடிநீர் , சாலைகள், உள்ளிட்ட அடிப்படை வசதிகளும், உள்கட்டமைப்பு பணிகளும் அதிக நிதி ஒதுக்கி மேம்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒசூர் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்டு சுமார் 4 மாதங்கள் ஆகியும் எங்கு பார்த்தாலும் நகராட்சி என்றே பெயர் பலகைகள் உள்ளதாகவும், இதனால் ஒசூர் மாநகராட்சியாக இன்னும் மாறவில்லையோ என்று பொது மக்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.
Next Story