போயஸ் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு : வேறு அமர்வுக்கு மாற்ற பரிந்துரை
ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற தடை கோரிய வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற நீதிபதி மணிக்குமார் தலைமையிலான அமர்வு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளது.
சென்னை போயஸ் தோட்டத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த வேதா நிலையத்தை, நினைவு இல்லமாக மாற்ற தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்யக்கோரி டிராபிக் ராமசாமி, தங்கவேலு ஆகியோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, நீதிபதிகள் மணிகுமார் மற்றும் சுப்ரமணிய பிரசாத் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ஜெயலலிதா தொடர்புடைய வழக்கில் நீதிபதி சுப்ரமணியம் பிரசாத் ஆஜராகியுள்ளதால், இந்த வழக்கை வேறு அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தனர்.
Next Story