85,000 மாணவர்கள் வரை பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்பு - அமைச்சர் அன்பழகன்
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார்.
பொறியியல் படிப்புகளில் சேர விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வெளியிட்டார். அப்போது, பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட விண்ணப்பங்களில், ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 150 மாணவர்களின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். இதில் சுமார் 85 ஆயிரம் மாணவர்கள் பொறியியல் படிப்புகளில் சேர வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகமானதால் தான், காலியிடங்கள் அதிகமாக உள்ளதாக கூறப்படுகிறது என்றும், படிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்நிலையில் கலந்தாய்வு வரும் 25ஆம் தேதி தொடங்க உள்ளது.
Next Story