பாசன தண்ணீர் அளவு குறையாமல் கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - விவசாயிகள்
பாசனத்திற்கான தண்ணீரின் அளவு குறையாமல், கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது, கொடிவேரி அணை. 1125-ஆம் நூற்றாண்டில் கட்டப்படட இந்த அணை, பிரபல சுற்றுலாதளமாகவும் விளங்குகிறது.
பெருந்துறை சட்டமன்ற தொகுதியில் நிலவி வரும் குடிநீர் பிரச்சினையை போக்க மறைந்த முன்னாள் முதமைச்ர் ஜெயலலிதா கொடிவேரி கூட்டுக்குடிநீர் திட்டத்தை அறிவித்தார்.
இதன் மூலம் 3 ஊராட்சி ஒன்றியங்கள், 8 பேரூராட்சிகள், 72 கிராம ஊராட்சிகளைச்சேர்ந்த கிராமங்கள் பயன்பெறும். இத்திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில், தமிழக அரசு 237 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திட்டத்தை விரைந்து நிறைவேற்ற நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இதனையடுத்து கடந்த ஆண்டு டிசம்பர் 13-ம் தேதி திட்டத்திற்கான பணிகள் வேகமெடுத்தன. இதற்காக கொடிவேரி கதவணை மேல் பகுதியில், பவானி ஆற்றில், நீரேற்று நிலையத்துடன் கூடிய ராட்த கிணறு அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டால், பாசனத்துக்கு கிடைக்கும் நீரின் அளவு குறையும் என விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தடப்பள்ளி வாய்க்காலில் உள்ள 18,000 ஏக்கரில் நடந்து வரும் விவசாயம் பாதிக்கும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
கொடிவேரி அணையின் கட்டமைப்பு கெடாதவாறு பெருந்துறை - கொடிவேரி கூட்டு குடிநீர் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.
Next Story