உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் தொடர்பான விவரங்களை, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யக்கோரிய வழக்கில், மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
உள்ளாட்சி தேர்தல் தொடர்பான வழக்கு : மாநில தேர்தல் ஆணையம் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவு
x
தமிழக தேர்தல் ஆணையம் நடத்தும் உள்ளாட்சி தேர்தலில், வாக்காளர் பெயர் பட்டியலில், மக்கள் தங்கள் பெயர் இருப்பதை உறுதி செய்யும் வழிவகை இல்லை. அதேபோல், உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களும் தேர்தல் ஆணையத்தில், அவர்களின் இணையத்தில் வெளியிடுவதில்லை. எனவே வரும் உள்ளாட்சித் தேர்தல் முதல்,  உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல், வேட்பாளர்களின் வேட்புமனுக்கள், தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களின் விபரங்கள் ஆகியவற்றை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. 

இந்த வழக்கின் விசாரணை நீதிபதிகள் சத்திய நாராயணன், புகழேந்தி அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது அரசுத்தரப்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பதிவேற்றம் செய்வதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், இது குறித்து பதில்மனு தாக்கல் செய்ய தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டு வழக்கை ஜூலை 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்