மழை வேண்டி 108 சிவலிங்க சிறப்பு பூஜை...
ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில் மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா ஸ்ரீராமசமுத்திரத்தில் உள்ள சிவாலயத்தில், மழை வேண்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் விவசாயம் செழிக்கவும், நீர் நிலைகளில் தண்ணீர் பெருகவும், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பொழியவும் 108 சிறிய சிவலிங்கங்கள் வைத்து அபிஷேக ஆராதனைகள் மற்றும் மலர் அர்ச்சனைகள் செய்யப்பட்டது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மழை வேண்டி சரவிளக்கு வழிபாடு...
சென்னை மணலியில் மழை வேண்டி அய்யா கோயிலில் பெண்கள் நீர் குடங்களுடன் சிறப்பு சரவிளக்கு வழிபாட்டை நடத்தினர். ஐயா தர்மபதி கோவிலில் பக்தர்கள் சரவிளக்கு பதிகம் பாடி குடங்களில் நீர் நிரப்பி வரிசையாக வைத்து மழை வேண்டி சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.இதனையடுத்து ஐயா தர்மபதி மலர்களால் அலங்கரித்த வாகனத்தில் அமர்ந்து வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பின்னர் பக்தர்கள் கோயிலில் உள்ள அரசமரத்தில் நீரை ஊற்றி வேண்டுதலை நிறைவேற்றினர்.
Next Story